For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பிரதமர் மோடியின் சம்பளம் ரூ.1.6 லட்சம்.. ஆனால் டிரஸ் விலை ரூ.3 கோடி.." - ராகுல் காந்தி வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!

11:54 AM Feb 12, 2024 IST | 1newsnationuser4
 பிரதமர் மோடியின் சம்பளம் ரூ 1 6 லட்சம்   ஆனால் டிரஸ் விலை ரூ 3 கோடி      ராகுல் காந்தி வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் பாஜக மட்டும் 370 தொகுதிகளை கைப்பற்றும் என அடித்து கூறினார் .

Advertisement

காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் தங்களது இருக்கையிலேயே அமர விரும்புகின்றன. அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் போட்டி போட தைரியம் இல்லை என்று கூறினார். மேலும் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, வருகின்ற மே மாதம் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தது.

காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி நிலையை ஒப்பீடு செய்து இந்த வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காங்கிரஸ் மற்றும் அவர்கள் தலைமையிலான கூட்டணி அரசுதான் முழு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 2014ஆம் வருடத்திற்கு முன்பு நடந்த ஆட்சியின் நிதிநிலை சீர்கேட்டினால் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப் பெரிய சவால்களை சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தது.

மேலும் காங்கிரஸ் ராகுல் காந்தியை திரும்பத் திரும்ப பிரதமர் ஆக்க முயற்சி செய்து தோல்வி அடைகிறார்கள். அவரால் ஒருபோதும் பிரதமராக முடியாது என்று பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்தார் . இந்நிலையில் மோடி குறித்த கடுமையான விமர்சனம் ஒன்றை முன் வைத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி . தனது பாரத் ஜோதயாத்திரையின் போது பேசிய அவர் மாதம் ரூ.1.6 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவரால் ஒரு மாதத்தில் ரூ.2-3 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த ஆடம்பர ஆடைகளை எவ்வாறு அணிய முடிகிறது.? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி காலையில் ரூ.2-3 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை அணிகிறார். மாலையில் ரூ.4-5 லட்சம் மதிப்பிலான ஆடைகள் மற்றும் சால்களை அணிகிறார். இவ்வாறு ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய் தனது ஆடைகளுக்கே பிரதமர் செலவிடுகிறார். இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வருகிறது. அவரது மாத சம்பளத்தில் இதையெல்லாம் வாங்கினார் என்று கூறினால் நம்ப முடியுமா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ 'X' தளத்தில் பதிவு செய்துள்ளது.

Tags :
Advertisement