PM MODI | பிரார்த்தனை முடிந்த பின் திரிசூலத்தை கையில் எடுத்து பொது மக்களை வாழ்த்திய பிரதமர் மோடி.!
வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் சனிக்கிழமையன்று பிரார்த்தனை செய்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி(PM MODI) 'திரிசூலத்தை' கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களை வாழ்த்தினார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது மோடி மற்றும் யோகி இருவரையும் பொதுமக்கள் வாழ்த்தினார். பிரதமர் மோடி சிவபெருமானின் ஆயுதம் ஆன திரிசூலத்தை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினார்.
காசி விசுவநாதர் கோவிலை தரிசிக்க வந்த பிரதமர் மோடி மற்றும் உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அங்கு கூடியிருந்த பெரும் திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் வருகைக்காக கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிறப்பு பூஜைகளுடன் சிவபெருமானை வழிபட்டனர் .
பிரதமர் மோடி(PM MODI) தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அங்கு சென்று இருந்த பிரதமர் மோடி ரோட் ஷோ ஒன்றும் நடத்தினார். வாரணாசி வருகைக்கு முன்பாக அருணாச்சல பிரதேசம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பொது மக்களுக்கான பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்காளத்தில், சிலிகுரியில் நடந்த " வளர்ச்சி அடைந்த பாரத் வளர்ச்சியடைந்த மேற்கு வங்காளம்" நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே மற்றும் சாலைத் துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்களை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டா நகரில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்கு மாகாணங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உலகின் மிக நீளமான இரட்டை வழி சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை திறந்து வைத்து பேசினார். இதற்கிடையே அசாமில் அஹோம் ராஜ்ஜியத்தின் ஜெனரல் லச்சித் போர்புகன் முகலாயர்களை வெற்றி கொண்டதை கொண்டாடும் விதமாக அவரது 84 அடி உயர சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.