PM MODI| "பெண் சக்தி முதல் இளம் தலைமுறை வாக்காளர்கள் வரை" பிரதமர் மோடி 'Mann Ki Baat' 110 வது உரையின் சிறப்பு தொகுப்பு.!
PM MODI: பிரதமர் மோடியின் 'Mann Ki Baat' நிகழ்ச்சியின் 110 வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க தொழில்நுட்பங்களின் பயன்பாடு பற்றி பேசினார்.
மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 110வது எபிசோடில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, இந்தியாவின் பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி அவர் நம் நாட்டின் கிராமப்புறங்களில் ஆளில்லா விமானங்களை பெண்கள் பறக்க விடுவார்கள் என்று யார் யோசித்துப் பார்த்திருப்பார்கள். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ட்ரோன் திதி திட்டம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் ட்ரோன் திதி என்று பெண்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என தெரிவித்தார்.
வனவிலங்குகளைப் பாதுகாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அவர், “நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவர் கூறுகையில், "சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்கு தினம் வருகிறது . இந்த நாள் வனவிலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு அதிகம் எதுவும் தரப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசின் முயற்சியால், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது. இங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராமங்களில் எல்லைப்புறங்களில் மற்றும் கிராமங்களில் புலிகள் வரும்போது எல்லாம் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக அவரது செல்போன்களுக்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எச்சரிக்கை செய்தி அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம், 'பகீரா' மற்றும் 'கருடா' என்ற ஆப்களை தயாரித்துள்ளது. 'பகீரா' செயலி மூலம், ஜங்கிள் சஃபாரிகளின் போது வாகனங்களின் வேகம் மற்றும் பிற செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்," என்றார். மேலும் "மெல்காட் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள கட்காலி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்கள் அரசின் உதவியுடன் தங்கள் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியுள்ளனர். இது அவர்களுக்கு பெரிய வருமான ஆதாரமாக மாறி வருகிறது" என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
நாம் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பில் மாடுகள் மற்றும் எருமை மாடுகளை பற்றியே பேசுகிறோம் ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தில் ஆடுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒடிசாவின் கலஹண்டியில், ஆடு வளர்ப்பு கிராம மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக மாறி வருகிறது, மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது என 110 வது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளுக்கு பொதுமக்கள் தரும் ஆதரவை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அருணாச்சலப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக மக்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்காக அளித்துள்ள பங்களிப்பு மற்ற மாநில மக்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.
இந்தியாவின் இளம் தலைமுறையினர் தங்களது வாக்குரிமையை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த தேர்தலில் வாக்களிக்க முதல்முறையாக தகுதி பெற்றிருக்கும் இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு துறையைச் சார்ந்தவர்கள் சினிமா பிரபலங்கள் எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் என ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.