PMO MODI | நெல்லையில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரதமர் மோடி.!! தென் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்.!!
PMO MODI: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவின்போது 102 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக கட்சியின் வெற்றிக்காக அந்தக் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத் தேர்தல் பிரச்சாரங்களுக்காக இரண்டு முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
தற்போது கேரளாவில் பிரச்சாரத்தை முடித்த பிரதமர் மோடி(PMO MODI) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வருகை புரிந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அம்பாசமுத்திரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி காரில் நின்றபடியே பாஜக தொண்டர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நெல்லை பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி சென்றார்.
திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் கன்னியாகுமரி தென்காசி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர்களையும் விலவங்கோடு சட்டமன்ற வேட்பாளரையும் ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு தொகுதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் அந்தத் தொகுதிக்கு மறு தேர்தல் நடைபெற இருக்கிறது.