மத்திய பிரதேச பட்டாசு ஆலை விபத்து: இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்..!! பிரதமர் மோடி அறிவிப்பு .!
மத்திய பிரதேசத்தின் ஹர்த்தா நகரில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மதியம் நடைபெற்ற இந்த வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இந்த கோர சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ள பிரதமர் மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த பட்டாசு ஆலை விபத்திற்கு தனது வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்திய அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூர விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.