PM-KISAN YOJANA: விவசாயிகளுக்கு 16-வது தவணை பணம் இன்று வெளியீடு.! இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.?
PM-KISAN YOJANA: பிரதமர் மோடி(PM Modi) அறிவித்த பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 16 வது தவணை பணம் இன்று வெளியிடப்படுகிறது.
பிரதம மந்திரியின் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 16-வது தவணை இன்று வெளியிடப்படுகிறது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பி எம் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தை பற்றிய முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 16-வது தவணை பணம் இன்று வெளியிடப்பட உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளை ஆதரிக்கும் பொருட்டு இந்தத் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவியாக வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது . இந்த நிதி 3 தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்தப் பணம் தகுதியான விவசாயிகளின் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் இந்தத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் செயல் திறன் உறுதி செய்யப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் பலனை பெறுவதற்கு விவசாயிகள் eKYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும்.பிஎம் கிசான் போர்ட்டல் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையத்தை (சிஎஸ்சி) பார்வையிடுவதன் மூலமாகவோ இதை வசதியாக செய்யலாம்.
பிஎம் கிசான் போர்டல் மூலமாக விவசாயிகள் தங்களது தகவல்கள் மற்றும் தவணைகள் பற்றி எளிதாக அறிந்து கொள்ளலாம். இதற்கு பிஎம் கிசான் போர்டல் இணையதள பக்கத்தை ஓபன் செய்து அதில் பதிவு எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் அந்த இணைய பக்கத்தில் சென்று விவசாயிகளின் தகுதி மற்றும் தவணை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சரிபார்ப்பதற்கான படிகள்:
கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் பிஎம் கிசான் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறந்து கொள்ள வேண்டும்.
பயனாளிகள் பட்டியல் டேப்பை ஓப்பன் செய்யவும்.
மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் போன்ற தொடர்புடைய விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பயனாளிகளின் பட்டியலை பார்க்க ரிப்போர்ட் பட்டனை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
பிரதமர் கிசான் சம்மன் நிதிக்கு விண்ணப்பித்தல்:
பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும் .
அதில் புதிய விவசாயிகள் பதிவு என்ற டேப்பை கிளிக் செய்து ஆதார் நம்பரை கொடுத்து ரகசிய குறியீட்டை சரிபார்த்த பின் உள்நுழையவும் .
PM-Kisan விண்ணப்பப் படிவம் 2023 இல் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும். மேலும் இவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டால் எதிர்கால தேவைகளுக்கு பயன்படும்.