PM Kissan: விவசாயிகளுக்கு 17-வது தவணை தொகை வழங்குவதில் சிக்கல்...! என்ன காரணம் தெரியுமா...?
மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்திலும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 17-வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் எப்பொழுது செலுத்தப்படும் என்ற கேள்வி தற்போத எழுந்துள்ளது.
17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகிறது. இதன் காரணமாக தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பாஜக ஆட்சி அமையாவிட்டால் இந்த திட்டம் தொடருமா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.