ரயில் நிலையத்தில் +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.! 24 வயது பஸ் டிரைவர் கைது.!
திருச்சி பகுதியில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 17 வயது மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 24 வயது இளைஞரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் அவரது பெயர் ஷேக் மொய்தீன் என்பதும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது. அவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு செய்து இருக்கிறார். இதனையும் விசாரணையில் அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். ரயில் நிலையம் போன்ற பொது இடத்தில் வைத்து மாணவிக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் தொந்தரவு அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.