2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்...!
2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கவும் மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
நாடு தழுவிய மலேரியா தடுப்புக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலேரியாவைத் தடுக்க அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, நோய் மேலாண்மை என்பது, நோய் கண்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், நோய் கண்காணிப்பு, அதைத் தொடர்ந்து முழுமையான மற்றும் திறன்மிக்க சிகிச்சை, பரிந்துரை சேவைகளை வலுப்படுத்துதல், தொற்றுநோய் தயார்நிலை மற்றும் விரைவான நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக அபாயமுள்ள பகுதிகளில் உட்புற எச்சம் தெளித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு மேலாண்மை, அதிக மலேரியா நோய் பரவும் பகுதிகளில் நீண்ட கால பூச்சிக்கொல்லி வலைகள், முட்டைப்புழுக்களை உண்ணும் மீன்களின் பயன்பாடு, நகர்ப்புறங்களில் உயிரி கொசுப்புழுக்களைக் கொல்லும் நடவடிக்கைகள் மற்றும் சிறிய சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட நடவடிக்கைகள், இனப்பெருக்கத்தை தடுப்பதற்கான நீர் ஆதாரங்களை குறைத்தல். நடத்தை மாற்ற தகவல் தொடர்பு, பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஆதரவு தலையீடுகள்.
2027 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மலேரியா நோய் பூஜ்ஜிய நிலையை அடையவும், 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கவும் மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பை அரசு தொடங்கியுள்ளது என மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.