பிரபல வங்கிக்கு ஆப்பு வைத்த ரிசரவ் பேங்க்... உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?
நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் வங்கி விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
ஆன்லைன், மொபைல் மூலமாக எந்தவொரு புதிய கணக்குகளோ, புதிய கிரெடிட் கார்டுகளோ கோடக் மஹிந்திரா வங்கியில் தொடங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. வங்கியினுடைய IT systems மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அதிருப்தியைத் தெரிவித்து வந்ததாகவும், ஆனால் அவற்றை சரி செய்ய வங்கி தரப்பில் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அதனால் தான் இம்முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரம், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, ஆன்லைன் மூலம் தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கும், புதிதாக வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளுக்கும் மட்டுமே பொருந்தும். மற்றபடி ஏற்கெனவே இருக்கும் வங்கி நடவடிக்கைகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISI | பாகிஸ்தான் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் தளபதி சுட்டுக் கொலை.!! ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு.!!