முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த வாரம் ஓடிடியில் மாஸாக வெளிவரும் படங்கள்..!! ராயன், கல்கி..!! ரசிகர்கள் செம ஹேப்பி..!!

Let us see what pictures of OTT on the OTT site this week.
02:16 PM Aug 21, 2024 IST | Chella
Advertisement

கடந்த வாரம் தங்கலான், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா ஆகிய படங்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகின. இதில், விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்ப்போம்.

Advertisement

திரையரங்குகளை பொறுத்தவரை இந்த வாரம் இரண்டு படங்களில் தமிழில் வெளியாகிறது. அதில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல்ம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை திரைப்படமும் 23ஆம் தேதி வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அடுத்தபடியாக டிஜிட்டலை பொறுத்தவரையில் இந்த வாரம் 7 படங்கள் வெளியாகின்றன. அதில் பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் கூட்டணியில் வெளிவந்த கல்கி திரைப்படம், நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. ஹிந்தி மொழியில் இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும், மலையாள படமான Grrr டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹிந்தி படமான முஞ்சியா ஸ்டார் கோல்டு இந்தியா தளத்தில் வெளியாகிறது.

மேலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடிகளை தாண்டி வசூலித்த ராயன் திரைப்படம் அமேசானில் 23ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா அமேசானில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி வெளியான ஜமா, அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் வெளியாகிறது. இப்படியாக இந்த வாரம் மேற்கண்ட படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.

Read More : வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பி விலை பேசும் கும்பல்..!! சிக்கிய காவலர்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்..!!

Tags :
அமேசான் பிரைம்சினிமா செய்திகள்திரைப்படங்கள்
Advertisement
Next Article