முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழக மருத்துவத் துறையில் பிசியோதெரபிஸ்ட் காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1,14,800..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Physiotherapist Grade - II (Physiotherapist Grade - II) Posts to be filled. A total of 47 people are to be inducted.
10:43 AM Oct 24, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாவுள்ள பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிசியோதெரபிஸ்ட் கிரேட் - II (Physiotherapist Grade - II) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 47 பேர் சேர்க்கப்பட உள்ளனர்.

Advertisement

இந்த பணிக்கு பிசியோதெரபிஸ்ட் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவப் படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.36,200 முதல் அதிகபட்சமாக ரூ.1,14,800 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 18ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். ஆனால் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி டிஏபி (பிஎச்) பிரிவினர் விண்ணப்ப கட்டணம் ரூ.500 செலுத்தினால் போதும். விண்ணப்பம் செய்வோர் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படையில் எழுத்துத் தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு மையங்களாக சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளன.

Read More : ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு..!! குடும்ப அட்டைதாரர்கள் குஷி..!! கூட்டுறவுத்துறையின் மாஸ் திட்டம்..!!

Tags :
சுகாதாரத்துறைதமிழ்நாடு அரசுபிசியோதெரபிஸ்ட்மருத்துவம்
Advertisement
Next Article