வியர்த்தபடி காட்சியளிக்கும் சிவகாமி.. உயரத்தில் மாறி மாறி காட்சி தரும் அதிசய சிவ லிங்கம்..!! இந்த கோவில் எங்க இருக்கு தெரியுமா?
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர். உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக ஒவ்வொரு கோயிலில் தனி சிறப்பும், வரலாறும் எப்போதும் சிறப்பு வாய்ந்தவையாகவே உள்ளது. ஆனால் ஒரு சில கோயிலின் அற்புதமான மற்றும் மர்மமான வரலாறு பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் பல அற்புதமான மற்றும் ஆச்சர்யமான உண்மைகளை உள்ளடக்கியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் சன்னதியில் அமைந்துள்ள அம்மனை சிவகாமி அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மனுக்கு அர்ச்சகர் எத்தனை முறை அலங்காரம் செய்தாலும் முகத்தில் மட்டும் வேர்வை வடிந்து கொண்டே உள்ளது. இதன் காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.
இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கத்தின் சிலை வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக கூறப்பட்டு வருவது, மன்னன் ஆலிங்கனம் சிவனுடன் சண்டை செய்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் நினைவாகவே வெட்டு காயத்துடனும், மன்னனின் மார்பு கவச தடத்துடனும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்ப்பவர்களின் பார்வை எந்த அளவிற்கு உயரமாக செல்லுமோ அந்த அளவிற்கு இக்கோயிலின் சிவலிங்கம் உள்ளது என்பது தனி சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஊரில் சுரபி எனும் நதி உள்ளது. இந்த நதியில் இறந்தவர்களின் எலும்புகள் விழுந்தால் அந்த எலும்புகள் கல்லாக மாறும் என்றும், இக்கோயிலின் மரத்தில் பூக்கும் நாகலிங்கப்பூவின் நடுவில் லிங்கம் உள்ளது போலவும், லிங்கத்தை சுற்றி ஆதிசேஷன் நிற்பது போலவும் உள்ளது. எனவே இந்த பூவை பக்தர்கள் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து சென்று வழிபட்டு வருகின்றனர்.
Read more ; ஹெஸ்புல்லாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்துள்ளதா? – இஸ்ரேல் தூதர் தகவல்