For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Trisha: '3 மாதத்தில் முறிந்த நிச்சயதார்த்தம்' த்ரிஷாவை சிங்கிள் லேடியாக்கிய அந்த சம்பவம்! இணையத்தில் வைரலாகும் பழைய போட்டோஸ்..!

11:47 AM May 24, 2024 IST | Mari Thangam
trisha   3 மாதத்தில் முறிந்த நிச்சயதார்த்தம்  த்ரிஷாவை சிங்கிள் லேடியாக்கிய அந்த சம்பவம்  இணையத்தில் வைரலாகும் பழைய போட்டோஸ்
Advertisement

கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிக்கும் நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் 3 மாதங்களில் முறிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பிரசாந்த் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ஜோடி படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் லேசா லேசா, இருப்பினும் அப்படம் வெளியாக தாமதம் ஆனதால் அமீர் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அவர் நடித்த மெளனம் பேசியதே திரைப்படம் திரிஷாவுக்கு அறிமுக படமாக அமைந்தது.

கடந்த 2002-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் விக்ரம் ஜோடியாக சாமி, விஜய் ஜோடியாக கில்லி, அஜித்துடன் ஜீ என தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் திரிஷா. கமலுடன் இணைந்து நடிக்காமல் இருந்த அவர், தக் லைஃப் படம் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

40 வயதுக்கு மேலாகியும் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து உள்ளார். இவரும் தயாரிப்பாளர் வருண் மணியனும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

ஊர் கூட்டி, பிரபலங்கள் அழைக்கப்பட்டு பிரமாண்டமாக நடந்தது த்ரிஷாவின் நிச்சயதார்த்த வைபவம். மோதிரம் மாற்றி, கிட்டத்தட்ட 70 சதவீதம் திருமணமே முடிந்த மாதிரியான சம்பிரதாயங்கள் நடந்தன. 2015 ஜனவரி 23ம் தேதி சென்னையில் நடந்த நிச்சயதார்த்தத்தில் யார் கண் பட்டதோ, ஏப்ரல் மாதமே அவர்களின் நிச்சயதார்த்தம் முடிவுக்கு வந்து, திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வாயை மூடி பேசவும், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்குப் பின், ஜெய் நடிக்க திரு இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருந்தார் வருண். அதில் த்ரிஷா தான் நடிப்பதாக இருந்தது, திடீரென த்ரிஷா விலக, டாப்சி ஒப்பந்தமானார். நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் த்ரிஷா கையில் ஒரு டஜன் படங்கள் இருந்தன. அவர் அதில் நடிக்க முயன்றார்.

ஆனால் வருண் குடும்பத்தார் அதற்கு சம்மதிக்கவில்லை. இது தான் பிரச்னையின் அடி. அதன் பின் ஏற்பட்ட மனகசப்பில் வருணின் தங்கை திருமணத்தை கூட புறக்கணித்த த்ரிஷா, அதன் பின் அவர் அணிவித்த மோதிரத்தை கழற்றிவிட்டு, திருமணம் ரத்து ஆனதை அறிவித்தார்.

இப்படி 41 வயதிலும் முரட்டு சிங்கிள் நடிகையாக வலம் வரும் திரிஷா, இன்றளவும் இளமை குறையாமல் இருப்பதால் அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில், வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களில் நடிகை திரிஷா செம்ம க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு என்ன ஆச்சு..? சுருண்டு விழுந்ததால் பரபரப்பு..!! வைரல் வீடியோ..!!

Advertisement