6ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு!! மேற்குவங்கம்தான் டாப்!! முழுவிவரம் இதோ!!
6ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 58.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட தேர்தலில் 58.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் 4ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏற்கனவே 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, ஏப்ரல் 13, மே 20ஆ தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே 25ஆம் தேதியான 6ஆம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6ஆம் கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் பத்து தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கும், தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் நான்கு ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஆறாம் கட்ட தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற தொகுதிகளாக டெல்லி, வடகிழக்கு டெல்லி, புதுடெல்லி , வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, வால்மீகி நகர், குருஷேத்ரா, பரிதாபாத், புவனேஸ்வர் அலகாபாத், விஷ்ணுபூர், சுல்தான் பூர் உள்ளிட்ட தொகுதிகள் இருக்கின்றன. மேலும் இந்த ஆறாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுமார் 40% பேர் கோடீஸ்வர வேட்பாளராக இருக்கின்றனர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு 6.20 கோடியாக இருக்கிறது. அதிகபட்சமாக குருஷேக்ரா தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளரான நவீன் ஜிண்டாலின் சொத்து மதிப்பு 1,841 கோடியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து சந்துரூப் மிஸ்ரா ரூ.482 கோடியுடனும், சுசில் குப்தா 169 கோடியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். குறைந்த சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக ரோஹ்டாக் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாஸ்டர் ரஞ்சித் சிங் வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே தன்னிடம் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இந்த நிலையில்குடியரசுத் தலைவர் முர்மு, சோனியா, ராகுல், கெஜ்ரிவால், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 58.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சரியாக 10 நாள்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
Read More: மீம்ஸ் மூலம் பிரபலமடைந்த ‘கபோசு’ நாய் மரணம்! நெட்டிசன்கள் வருத்தம்..!