அசத்தும் இந்தியா..! முதல் டெங்கு தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பம்...!
இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் பனேசியா பயோடெக் ஆகியவை இணைந்து, இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கான முதல் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த மைல்கல் சோதனை பனேசியா பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் உள்நாட்டு டெட்ராவேலன்ட் டெங்கு தடுப்பூசியான டெங்கிஆல்-ன் செயல்திறனை மதிப்பீடு செய்யும். இந்த சோதனையில் முதல் பங்கேற்பாளருக்கு நேற்று ரோதக்கில் உள்ள பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (பிஜிஐஎம்எஸ்) தடுப்பூசி போடப்பட்டது.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா, "இந்தியாவின் முதல் உள்நாட்டு டெங்கு தடுப்பூசிக்கான இந்த 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையின் தொடக்கம், டெங்குவுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த பரவலான நோயிலிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதுடன் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் திறன்களை எடுத்துக்காட்டுகிறது. ஐ.சி.எம்.ஆர் மற்றும் பனேசியா பயோடெக் இடையேயான இந்த ஒத்துழைப்பின் மூலம், நமது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையில் தற்சார்பு இந்தியா என்ற நமது தொலைநோக்கை வலுப்படுத்தும் என்றார்.
தற்போது, இந்தியாவில் டெங்குவுக்கு எதிராக வைரஸ் தடுப்பு சிகிச்சை அல்லது உரிமம் பெற்ற தடுப்பூசி எதுவும் இல்லை. நான்கு செரோவகைகளுக்கு நல்ல செயல்திறனை அடைய வேண்டிய அவசியம் இருப்பதால் ஒரு பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவது சிக்கலானது ஆகும். இந்தியாவில், டெங்கு வைரஸின் நான்கு ரத்த வகைகளும் பல பகுதிகளில் பரவுகின்றன அல்லது இணைந்து பரவுகின்றன.
டெட்ராவேலன்ட் டெங்கு தடுப்பூசி திரிபு (TV003/TV005), முதலில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களால் (NIH) உருவாக்கப்பட்டது, இது உலகளவில் முன் மருத்துவ பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த திரிபு கொண்ட மூன்று இந்திய நிறுவனங்களில் ஒன்றான பனேசியா பயோடெக் தடுப்பூசி உருவாக்கத்தில் மிக மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. ஒரு முழு அளவிலான தடுப்பூசி உருவாக்கத்தை உருவாக்க நிறுவனம் இந்த விகாரங்களில் விரிவாக பணியாற்றியுள்ளது மற்றும் இந்த பணிக்கான செயல்முறை காப்புரிமையை வைத்திருக்கிறது. இந்திய தடுப்பூசி உருவாக்கத்தின் கட்டம் 1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகள் 2018-19 ஆம் ஆண்டில் நிறைவடைந்தன, இது நம்பிக்கைக்குரிய முடிவுகளைத் தந்தது.
ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து, பனேசியா பயோடெக் இந்தியாவின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 19 தளங்களில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தும், இதில் 10,335 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான வயது வந்த பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள். பனேசியா பயோடெக்கின் பகுதி ஆதரவுடன் ஐ.சி.எம்.ஆரால் முதன்மையாக நிதியளிக்கப்பட்ட இந்த பரிசோதனை, பங்கேற்பாளர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பின்தொடர உள்ளது என்றார்.