முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

PF பம்பர் பரிசு!… ஆட்டோ-மோட் செட்டில்மென்ட்டில் பணம் எடுக்கும் புதிய வசதி!… முழுவிவரம்!

08:30 AM May 31, 2024 IST | Kokila
Advertisement

PF வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய பரிசாக, ஊழியர்களின் அவசரத் தேவைகளுக்காக, வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதிக்கான ஆட்டோ-மோட் செட்டில்மென்ட்டில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதியை அறிவித்துள்ளது. இதன் பலன்களை 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் எளிதாகப் பெற முடியும். இது, அவசரகாலத்தில் PF உறுப்பினர்களுக்கு நிதி வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. அந்தவகையில், பிஎஃப் பணியாளர்களுக்கு தேவைப்படும் தொகை மூன்று நாட்களுக்குள் எளிதாக அவர்களது கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

Advertisement

நோய் சிகிச்சை, படிப்பு, கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றிற்காக ஊழியர்கள் இந்தப் பணத்தை எடுக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், முன்பு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது. தற்போது இந்த வரம்பை ரூ.1 லட்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு தேவைப்படும் முன்பணத்தை அவர்களுக்கு வழங்கும் பணி ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் கணினி மூலம் எளிதாக செய்யப்படும். இதனால் எந்த வித நேர விரயமும் ஏற்பட வாய்ப்பில்லை. இதற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

அவசரகாலங்களில் நிதியை க்ளைம் செட்டில் செய்வதற்கான தானியங்கி செயல்முறை, அதாவது ஆட்டோ மோட் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது. எனினும்ம் அப்போது உடல்நல பிரச்சனை, அதாவது நோய்களுக்கான சிகிச்சையின் போது மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இப்போது அதன் நோக்கம் விரிவடைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான நிதி உதவி என இவை அனைத்துக்கும் இப்போது EPFல் இருந்து பணத்தை எடுக்கலாம்.

Readmore: மக்களே…! நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்…! முழு விவரம்…

Tags :
AUTO-MOD SETTLEMENTBUMPER PRIZEmoneyNEW FACILITYpf
Advertisement
Next Article