பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை ரூ.10.20 குறைப்பு!! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்பட்டு ரூ.258.16 ஆகவும், அதிவேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.33 என குறைக்கப்பட்டு ரூ.267.89 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்கு இந்த புதிய விலைகள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலையை குறைக்கும் நடவடிக்கை பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து 3 முறை எரிபொருள் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ; மனிதனை உண்ணும் மனிதர்கள்!. உலகில் எங்கு வாழ்கிறார்கள்?. பெண்களின் நிலை மிகவும் மோசமானது!