முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Central govt: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு...! காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது...!

05:50 AM Mar 15, 2024 IST | 1newsnationuser2
Advertisement

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ரூ.100 குறைத்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க் கப்படும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையையும் தற்போது மத்திய அரசு குறைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தனது எஸ் தளத்தில்; நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.2 குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் செலவு கணிசமாக குறையும். அத்துடன் 58 லட்சம் கனரகவாகனங்கள், 6 கோடி கார்கள்,27 கோடி இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 663 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாறாமல் இருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் இரண்டு மூன்று தினங்களே உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement
Next Article