முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க அனுமதி..!! மயில் முட்டைகளை உடைக்க வேண்டும்..!! சட்டப்பேரவையில் நடந்த பரபரப்பு விவாதம்..!!

Forest Minister Ponmudi stated in the Legislative Assembly that the Forest Department has been granted permission to shoot wild boars that are damaging farmers' crops.
02:38 PM Jan 10, 2025 IST | Chella
Advertisement

விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Advertisement

காட்டுப் பன்றிகளின் தொல்லையால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, "காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாயிகளைக் காக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில பரிந்துரைகளை கொடுத்தார்கள்.

அதனடிப்படையில், அரசாணை தயார் செய்து நேற்று (ஜன. 9) முதல்வர் அவர்கள் வெளியிட்டார். அதன்படி, காப்புக்காட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிக்கு வரும் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதியில்லை. காப்புக்காட்டில் இருந்து ஒரு கிமீ முதல் 3 கிமீ வரை உள்ள பகுதிக்கு வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

காட்டுப் பன்றிகள் 3 கி.மீட்டருக்கு அப்பால் வருமானால் அதை சுட்டுப்பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளே காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்" என்று பொன்முடி தெரிவித்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மயில்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் மயில்களின் இன உற்பத்தியை குறைக்க மயில் முட்டைகளை சேகரித்து உடைக்க வேண்டுமெனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Read More : குடும்ப அட்டைதாரர்கள் யாரும் இந்த 2 நாட்களில் ரேஷன் கடைக்கு போகாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tags :
அமைச்சர் பொன்முடிகாட்டுப் பன்றிசட்டப்பேரவைசெங்கோட்டையன்மயில் முட்டைகள்விவசாயிகள்
Advertisement
Next Article