For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்...! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Permission should be given to opposition protests...! Madras High Court orders action
07:16 AM Jan 24, 2025 IST | Vignesh
எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்     சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த விதிமுறைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் காவல்துறையினர் அமல்படுத்த வேண்டும். ஆளுநருக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டத்தை அனுமதித்த காவல் ஆணையருக்கு எதிராக பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த காவல் துறை ஆணையர் அனுமதி மறுத்துவிட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால், ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதியளித்துள்ளார் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் ஜனவரி 6 முதல் 21 வரை 15 நாட்களுக்கு சென்னையில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது என தடை விதித்திருந்த காவல்துறை, அனுமதியின்றி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவுக்கு எதிராக மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிக்கு எதிராகவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த விதிமுறைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் காவல்துறையினர் அமல்படுத்த வேண்டும். ஆளுநருக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டத்தை அனுமதித்த காவல் ஆணையருக்கு எதிராக பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
Advertisement