பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே அந்த சிலை இருக்காது...! அண்ணாமலை சூளுரை...
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைத்துக் கோயில்களின் அருகிலும் கடவுளுக்கு விரோதமானவர்களின் சிலைகள், கொடிகள், பிளக்ஸ்கள் அகற்றப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் முன்பாக உள்ள ஈ.வெ.ராமசாமியின் சிலையை அகற்றுவோம் என மறைமுகமாகக குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்த யாத்திரை கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வரும் நாளே இந்து சமய அறநிலையத்துறைக்கு கடைசி நாள் என்றார். ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 56வது நாளாக 100வது சட்டமன்றத் தொகுதியை தொட்டபோது ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்றும், அக்கட்சி கொடிக்கம்பம் கட்டியிருப்பதாகவும் கூறினார்.
மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற நாளில் இதுபோன்ற கொடிக்கம்பங்கள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, கடவுள் இல்லை என்று கூறிய அனைவரின் சிலைகளும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களும், தமிழ்க் கவிஞருமான திருவள்ளுவரின் சிலைகள் வைக்கப்படும் என்றார்.