மக்களுக்கு ரிசர்வ் வங்கி மீதான நம்பிக்கை குறைந்துவிடும்!. ரகுராம் ராஜன் எச்சரிக்கை!
புதிய சில்லறை பணவீக்க விகிதத்தைக் கணக்கிடுவதில், உணவுப் பொருட்களின் விலையை சேர்க்கக் கூடாது என்றும் இதனால் ரிசர்வ் வங்கி மீதான மக்களின் நம்பிக்கையை குறைந்துவிடும் என்று முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக PTI ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ள ரகுராம் ராஜன், பணவீக்கம் தொடர்பான கணக்கீட்டில் இருந்து, உணவு விலை பணவீக்கத்தை நீக்குவது தவறானது. பணவீக்கத்தின் முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக கூறக்கூடாது. அப்போது உணவுப் பொருட்கள் அல்லது வேறு ஏதாவது விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்தால், அது பணவீக்க கணக்கீட்டுக்குள் இல்லாத நிலையில், ரிசர்வ் வங்கி கணிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது
அனைவருக்கும் வங்கிக் கணக்குகளைப் பெறுவது என்பது பிரதமரால் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அது மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் அடுத்த கட்டமாக மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினார்களா என்பதை உறுதிப்படுத்துவது; கணக்கைத் திறப்பது மிகவும் எளிதானது, ஆனால் அவர்கள் அதை செயலற்ற நிலையில் விட்டால், என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினார்.
Readmore: ஈரான் தாக்குதல்!. ஒளிந்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடும் வீடியோ வைரல்!