இந்தியாவில் இப்படியொரு கோவிலா? எலிகளை வணங்கும் மக்கள்!… எலி குடித்த பாலை பிரசாதமாக வழங்கும் சுவாரஸ்யம்!…
ராஜஸ்தானில் உள்ளது கர்ணி மாதா கோவில் செல்லமாக எலி கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தாட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சித்தருக்காக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் துர்க்கையின் அவதாரம் என்று சிலர் கூறுகின்றனர்.இறைபக்தியில் மிகுந்த ஆர்வமுடைய கர்ணி மாதா அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அங்கேயே தவத்தில் மூழ்கிவிடுவது வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒருமுறை இவரது தங்கையின் மகனான அங்கே ஒரு குளத்தில் குளிக்கும் போது அதில் மூழ்கி இறந்து விடுகிறான். அவன் உடலை கொண்டு வந்து அக்கா கர்ணி மாதா முன் கிடத்தி என் மகனைக் காப்பாற்று என கதறியுள்ளார்.
இதையடுத்து கர்ணி மாதா குழந்தையின் உயிரை திரும்ப கொடுக்கும் படி எமனிடம் கெஞ்சினாராம். ஆனால் எமனோ அந்த பையனின் ஆன்மா வேறு ஒரு உடலுக்கு கெடுத்துவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார். இதனால் கோபமடைந்த கர்ணி மாதா, இனி என் வம்சாவளியை சேர்ந்த யார் உயிர் போனாலும் அதன் ஆன்மா யாருக்கும் கொடுக்காமல், வேறு இடத்தில் பிறக்க வைக்காமல், இங்கேயே எலி உருவத்தில் பிறப்பெடுக்க வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம். இப்படி பிறந்த எலிகள் தான் இங்கு கோயில் முழுவதும் ஓடி ஆடி கொண்டிருக்கின்றன. 1538ம் ஆண்டு இந்த கர்னி மாதா திடீரென மறைந்து தெய்வமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசித்து செல்கின்றனர்.
இங்குள்ள எலிகளையும் கடவுள்களாக பார்க்கப்படுகின்றது. அதனால் எலிகளை பராமரிக்க, அவை செளகரியமாக இருக்க கோயிலில் ஆங்காங்கே சுவர்கள், கீழ் பகுதி என பல இடங்களில் பெரிய ஓட்டை போடப்பட்டுள்ளன. மேலும் எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் எலி குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எலிகள் நம்மீது ஏறினால் அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. அதே போல் வெள்ளை எலியை பார்த்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் யாரேனும் எலியை கொன்றுவிட்டால் அதற்கு பிராச்சியத்தமாக தங்கத்தினால் ஆன எலியை கோயிலுக்கு வழங்குகின்றனர். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றது.