சின்னம்மை தடுப்பூசி போட்டவர்கள் Mpox வைரஸில் இருந்து தப்பிக்கலாம்!. நிபுணர்கள் தகவல்!
Mpox: ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொடிய நோய்த் தொற்றான எம்பாக்ஸ் உலக சுகாதார அமைப்பால் சர்வதேச சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று, சுவீடன் நாட்டு சுகாதார அதிகாரிகள் ஐரோப்பாவில் முதல் எம்பாக்ஸ் தொற்று பதிவானதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் முதல் எம்பாக்ஸ் தொற்று பதிவானதும் உறுதியானது.
ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி 2024இல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 17,541 எம்பாக்ஸ் நோய்த்தொற்று பதிவாகி இருப்பதாகவும், 517 இறப்புகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காங்கோ ஜனநாயக குடியரசில் மட்டுமே 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதோடு இந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதன்படி, இதுவரை 548 பேர் எம்பாக்ஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக ஏ.பி செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
Mpox எவ்வளவு ஆபத்தானது? எம்பாக்ஸ் ஒரு விலங்குவழி நோய் (zoonotic disease). இது விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்குப் பரவக்கூடியது. தற்சமயம் இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் பரவி வருகிறது. இந்தப் பகுதிகளில்தான் இது உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் வாழும் சிறிய கொறித்துண்ணிகள், குரங்குகள் மற்றும் பிற பாலூட்டிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று ஏற்பட்ட 21 நாட்களுக்குள் தடிப்புகள், காய்ச்சல், தொண்டை வறட்சி, தசை வலி, போதிய ஆற்றலின்மை போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். மேலும், வலி மற்றும் எரிச்சலூட்டக்கூடிய சரும தடிப்புகளும் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. உதாரணமாக, பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது அல்லது சுவாசிப்பது, அவர்களைத் தொடுவது, முத்தமிடுவது மற்றும் உடலுறவு கொள்வதன் மூலமும் இது பரவுகிறது. "இந்த வைரஸ் கோவிட் போலவே பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலமாகவும் பரவுகிறது.
அடுத்ததாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள மக்கள், புற்றுநோய் அல்லது எச்.ஐ.வி சிகிச்சை மேற்கொண்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இடையே எம்பாக்ஸ் பரவல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பெரியம்மையைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், எம்பாக்ஸ் நோய்த்தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படும். சின்னம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு உள்ளதா?
சின்னம்மை அல்லது சிக்கன்பாக்ஸ் நோய் வந்தவர்களுக்கு அல்லது சின்னம்மை தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று பல ஊடக அறிக்கைகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பெரியம்மைக்கு BCG தடுப்பூசி போடப்படுகிறது. குரங்கு அம்மை வைரஸ் பெரியம்மை போன்றது என்பதால், சின்னம்மை தடுப்பூசி போட்டவர்கள் குரங்கு வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Readmore: அதிரடி மாற்றம்..! அடுத்த தலைமைச் செயலர் யார்…? சிவ்தாஸ் மீனாவுக்கு புது பொறுப்பு…!