For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கைரேகை, கருவிழிகள் பதிவு இல்லாதவர்களும் ஆதார் பெறமுடியும்!… எப்படி தெரியுமா?

09:40 PM Dec 22, 2023 IST | 1newsnationuser3
கைரேகை  கருவிழிகள் பதிவு இல்லாதவர்களும் ஆதார் பெறமுடியும் … எப்படி தெரியுமா
Advertisement

“ஜோசிமோல் பி ஜோஸ் போன்றவர்களுக்கும் மங்கலான கைரேகைகள் அல்லது பிற குறைபாடு உள்ளவர்களுக்கும் மாற்று பயோமெட்ரிக் மூலம் ஆதார் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும் ஆலோசனை அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஆதார் ஆணையம் சிலருக்கு பயோமெட்ரிக் பதிவு செய்வதில் இருந்து விதிவிலக்கு வழங்குகிறது. முதுமை அல்லது தொழுநோய் காரணமாக வெட்டு, காயம், கட்டு, காய்த்துப் போன அல்லது வளைந்த விரல்கள் இருந்தால் கைரேகை பதிவு செய்யத் தேவையில்லை. கருவிழிகள் பதிவுசெய்ய முடியாத சூழலிலும் விதிவிலக்கு வழங்கப்படும்.

Advertisement

கைரேகைகளை பதிவுசெய்ய முடியாதவர் கருவிழி ஸ்கேன் மட்டும் செய்து ஆதார் பெறலாம். இதேபோல், கருவிழிகளை ஸ்கேன் செய்ய முடியவில்லை என்றால், கைரேகையை மட்டும் பயன்படுத்த ஆதார் பெறலாம். கைரேகை மற்றும் கருவிழி இரண்டையும் வழங்க முடியாத நபர் இரண்டும் இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம். அத்தகைய நபர்களுக்கு, பயோமெட்ரிக் விதிவிலக்கு பதிவு வழிகாட்டுதல்களின் கீழ், பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி / பிறந்த ஆண்டு ஆகிய தகவல்களுடன் ஆதார் அட்டை வழங்கப்படும்.

Tags :
Advertisement