மக்களே..!! ’இந்த உணவுகளிலும் மெத்தனால் இருக்காம்’..!! ’இனி பார்த்து சாப்பிடுங்க’..!! ’அதிகமா போச்சுன்னா அவ்வளவு தான்’..!!
மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 52 பேர் உயிரிழந்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. நாம் விரும்பி உண்ணும் சில உணவுகளில் கூட, மெத்தனால் இருக்கிறது. என்னென்ன உணவுகளில் இருக்கிறது, அவற்றை உண்பதால் பாதிப்புகள் ஏற்படுமா? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் புவனேஸ்வரி கூறியுள்ளார். அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் ஆகியவை கலந்ததே மெத்தனால். பிளாஸ்டிக், பெயிண்ட், அழகு சாதனப் பொருள்கள், பூச்சிக்கொல்லி, துணி துவைக்கும் லிக்விட் என அனைத்திலுமே மெத்தனால் கலக்கப்படுகிறது. இப்படி நாம் தினம் தினம் பயன்படுத்தும் பொருள்களில் இடம்பிடித்துள்ள மெத்தனால், நம் உணவுப்பொருள்களில் கூட இருக்கிறது. மெத்தனால் இயற்கையிலேயே பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கிறது. இவ்வளவு ஏன்? நமது உடலில் கூட மெத்தனால் இயற்கையிலேயே இருக்கிறது.
ஆனால், குளிர்பானங்கள், கார்பன் கலந்த பானங்கள் போன்றவற்றில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மெத்தனால் கலக்கப்படுகிறது. மேலும் சாஸ், ஜாம், மயோனைஸ் போன்றவற்றிலும் அதில் கலக்கப்பட்டிருக்கும் பொருள்களில் வேதியல் மாற்றம் நிகழ்ந்து மெத்தனால் உருவாகிறது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியைப்போல குறிப்பிட்ட அளவை விட அதிகமாக மெத்தனால் பயன்படுத்தப்படும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. உணவுப்பொருள்களில் மெத்தனால் 5 மில்லி கிராம்/டெசிலிட்டருக்கு கீழ் இருப்பது தான் பாதுகாப்பானது.
உணவில் ஏன் மெத்தனால் சேர்க்கப்படுகிறது..?
மெத்தனால் உணவின் சுவையைக் கூட்டும் என்பதால், அவை உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மேலும் மெத்தனாலை உணவில் சேர்க்கும்போது, அதே உணவையே திரும்ப திரும்ப சாப்பிட தோன்றும். அளவுக்கு மீறி மெத்தனால் உடலுக்குள் சேர்கையில் கண் எரிச்சல், பார்வை குறைபாடு, வாந்தி, மூச்சுத் திணறல், வயிற்று வலி ஆகியவை ஏற்படும். முக்கியமாக மரணம் கூட ஏற்படலாம். மது, சாராயம் ஆகியவற்றில் நொதித்தல் நடக்கும்போது தானாகவே மெத்தனால் உருவாகும். இதையும் தாண்டி மனிதர்களே சுவைக்காகவும், போதைக்காகவும் மெத்தனாலை சேர்க்கும்போது தான் மரணம் நிகழ்கிறது.
மெத்தனால் இருக்கும் உணவுகளையே சாப்பிடக்கூடாது என்று முழுவதுமாக ஒதுக்கிவிட வேண்டாம். ஆனால், அந்த உணவுகளை உண்ணும்போது மெத்தனால் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டுவது நல்லது. மெத்தனால் கலந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.
Read More : பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! பணம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?