முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே..!! இன்றும், நாளையும் சம்பவம் இருக்கு..!! பாதுகாப்பா இருங்க..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

02:55 PM Apr 06, 2024 IST | Chella
Advertisement

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதேபோல், 08ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இந்நிலையில் இன்றும், நாளையும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Read More : கச்சத்தீவு விவகாரம்..!! முதன்முறையாக கருத்து தெரிவித்த இலங்கை..!! யார் காரணம்..?

Advertisement
Next Article