முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே..!! ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு..!! அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்குமா..?

We will go on a one-day strike by locking all ration shops across the state on the 7th.
01:07 PM Nov 05, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement

ரேஷன் கடைகள் என்பது தமிழ்நாட்டில் வங்கிகளைவிடவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. மக்களுக்கு தேவையான பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் உள்பட ரொக்கப்பணம் கூட ரேஷன் கடைகள் மூலமே விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி பல்வேறு சேவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்தாலும், அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் 4 துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் எல்லாருக்குமே பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தஞ்சையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் 4 துறைகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதனால் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு துறையையும் திருப்திப்படுத்த வேண்டிய நிலையில், ரேஷன் கடை பணியாளர்கள் இருக்கின்றனர். எனவே, பொது விநியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் பூட்டி விட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம். அன்று மாவட்ட தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று கூறினார்.

Read More : கிரெடிட் கார்டு..!! தொகையை செலுத்த தவறினால் என்ன நடக்கும் தெரியுமா..? விதிமுறைகள் இதோ..!!

Tags :
அத்தியாவசியப் பொருட்கள்தமிழ்நாடு அரசுநியாய விலைக் கடைகள்ரேஷன் கடை
Advertisement
Next Article