Lok Sabha 2024 | "அன்று இட ஒதுக்கீடு; இன்று தகரடப்பா"… அண்ணாமலை பேச்சால் எழுந்த புதிய சர்ச்சை.!
Lok Sabha: பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாறி மாறி பொய் பேசி வருவதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி முடிவடையும். இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது. இவை தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக இந்த தேர்தலில் ஒரு சில தொகுதிகளையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோருக்கும் எம்பி சீட் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி போராடி வருகிறது.
இந்நிலையில் கோவை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருவது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தீவிரமான தேர்தல் பணிகளுக்கு முன்பு யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை திமுக அரசின் போதை கும்பலுடன் தொடர்பு படுத்தி பேசி வந்தார். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர் தனது தொகுதியின் அதிமுக வேட்பாளரை கல்வி குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அண்ணாமலை அதிமுக வேட்பாளர் போன்று அப்பாவை வைத்து படித்து வரவில்லை என தெரிவித்த அவர் ரெண்டே ரெண்டு தகர பெட்டியோடு வந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இட ஒதுக்கீட்டில் தான் படித்தேன் என்று அண்ணாமலை கூறிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ள மக்கள் மாறி மாறி பொய்களை பரப்பி வரும் அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹாஸ்டாக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.