For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக மக்களே..!! வெளியே வராதீங்க..!! அடுத்த 5 நாட்களுக்கு கடுமையாக இருக்கும்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

02:03 PM Apr 04, 2024 IST | Chella
தமிழக மக்களே     வெளியே வராதீங்க     அடுத்த 5 நாட்களுக்கு கடுமையாக இருக்கும்     வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல், நாளை முதல் அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.04.2024 முதல் 10.04.2024 வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 3 டிகிரி செல்சியஸ் என்ற இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 4 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் என்றும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ’பெண்களுக்கு பிரச்சனை என்றால் என் மனைவி பத்ரகாளியாக மாறிவிடுவார்’..!! அன்புமணி ஒரே போடு..!!

Advertisement