சென்னை மக்களே..!! இனி வாகனம் பார்க்கிங் செய்வதில் பெரும் சிக்கல்..!! அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு..!!
சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க்கும் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் விதிமுறைகள் இல்லாமல் ஆங்காங்கே பார்க் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கொள்கை 3 மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கில் நீதிபதிகள் கூறுகையில், சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இறுதிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து நிறுவனம் (சியுஎம்டிஏ) மோட்டார் வாகன பார்க்கிங் கொள்கை வரைவு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகளைப் பெற்று 3 மாதங்களுக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மாநில அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 11, 2024 அன்று தலைமைச் செயலர் ஷிவ் தாஸ் மீனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் CUMTA-வின் வரைவுக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதில் சில பரிந்துரைகள் இணைக்கப்பட்டதாகவும் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜே. சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம், வாகனங்களை எங்கே எல்லாம் பார்க் செய்யலாம். எங்கே எல்லாம் பார்க் செய்ய கூடாது. தவறான இடங்களில் பார்க்கிங் செய்தால் என்ன நடவடிக்கை, என்ன அபராதம். ஒரு இடத்தை பார்க்கிங் இடமாக மாற்ற எப்படி அனுமதி பெறுவது என்பது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்படும். தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பின், வரைவு கொள்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தங்களது பிள்ளைகளின் திருமணத்திற்கு முகேஷ் அம்பானி எத்தனை கோடி செலவு செய்தார் தெரியுமா..?