முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை மக்களே..!! இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..!! மோசமான நிலைமை..!!

As the air quality index in Chennai has crossed 250, people with respiratory problems like asthma are urged not to come out of their houses.
07:07 AM Nov 01, 2024 IST | Chella
Advertisement

தீபாவளியன்று பட்டாசு வெடித்ததால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டார தகவல்களின்படி, சென்னையின் 3 பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210 மற்றும் பெருங்குடியில் 201 ஐ எட்டியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 201-300 க்கு இடைப்பட்ட காற்றின் தரக்குறியீட்டை "மோசம்" என்று வகைப்படுத்துகிறது. இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். 301-400 க்கு இடைப்பட்ட நிலைகள் இருந்தால் அது "மிகவும் மோசமானவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 401-500 க்குள் இருந்தால் அவை கடுமையானதாகக் கருதப்படுகின்றன. மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை :

சென்னையில் தற்போது காற்றின் தரக்குறியீடு 250-ஐ கடந்துள்ளதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. விடிந்த பிறகும் கூட பட்டாசில் இருந்து வெளியான நுண்துகள்கள் பனியுடன் சேர்ந்து சென்னை வான்பரப்பில் மிதந்தபடி காணப்படுகிறது. ஏற்கனவே காற்று மாசுபாட்டை தவிர்க்க, காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் என 2 மணி நேரம் மட்டுமே தீபாவளி நாளான்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி பலரும் பட்டாசுகளை வெடித்ததால், சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

Read More : இல்லத்தரசிகளே அதிர்ச்சி!. சிலிண்டர் விலை உயர்ந்தது!. எவ்வளவு தெரியுமா?

Tags :
காற்று மாசு அதிகரிப்புசென்னைதீபாவளி பண்டிகை
Advertisement
Next Article