For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை மக்களே!… குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும்!… சுகாதாரத்துறை!

06:41 PM Dec 10, 2023 IST | 1newsnationuser3
சென்னை மக்களே … குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும் … சுகாதாரத்துறை
Advertisement

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 9 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தட்டம்மை தடுப்பூசி செலுத்த வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், புயல் மற்றும் மழையால் காயமடைந்த நோயாளிகளுக்கு, மருத்துவ முகாம்களில், 'டெட்டனஸ் டாக்ஸாய்டு' தடுப்பூசி வழங்கப்படும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நீரினால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறினார். தொற்றுநோயை தடுக்க, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் அவசியம். வெள்ள நீரில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. குடிநீரை காய்ச்சிதான் பருக வேண்டும். ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால், அங்கு முன்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். உள்ளாட்சி அமைப்புகள் சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை, மக்களுக்கு வினியோகிக்க வேண்டும்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகளை நன்கு சுத்தம் செய்த பின், குடிநீர் சேகரித்து பயன்படுத்த வேண்டும். தற்காலிக தங்குமிடங்களில் இருப்பவர்கள், அங்கு வழங்கப்படும் குடிநீரைதான் பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே, உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை விரைந்து அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில், 'பிளீச்சிங் பவுடர்' மற்றும் சுண்ணாம்பு கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், கொசுக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், இறந்த விலங்குகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல், தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி, ஒரு 'டோஸ்' கொடுக்க வேண்டும். அதன்பின், வேறு தடுப்பூசி போடுவதற்கு, நான்கு வார இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு '104' மருத்துவ சேவை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

Tags :
Advertisement