For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை மக்களே கவனமா இருங்க..!! அடுத்தடுத்து அட்மிட் ஆகும் நோயாளிகள்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

01:44 PM Nov 11, 2023 IST | 1newsnationuser6
சென்னை மக்களே கவனமா இருங்க     அடுத்தடுத்து அட்மிட் ஆகும் நோயாளிகள்     மருத்துவர்கள் எச்சரிக்கை
Advertisement

கடந்த சில நாட்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா். காய்ச்சலுடன் மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 30% பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்படுவதாக கூறியுள்ளனர்.

Advertisement

சால்மோனெல்லா டைஃபி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. தரமற்ற குடிநீா், சுகாதாரமற்ற உணவு மூலம் இந்த நோய் பரவுகிறது. குடல் பகுதியில் பாதிப்பை இந்த வகை பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் என்றாலும் நாளடைவில், அதன் தீவிரத்தைப் பொருத்து கல்லீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம், நுரையீரலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மே மற்றும் ஜூன் மாதங்களில் டைபாய்டு பாதிப்பு அதிகமாக இருக்கும். பின்னா், செப்டம்பரில் அதன் தாக்கம் குறைந்து டெங்கு போன்ற பிற வகையான காய்ச்சல் பரவும். ஆனால், நிகழாண்டில் மழை பாதிப்பு பரவலாக இருப்பதால், தற்போது டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.

டைபாய்டு அறிகுறிகள்...

உடல் சோா்வு

கடுமையான காய்ச்சல்

பசியின்மை

தலைவலி

வயிற்றுப்போக்கு

வாந்தி

மயக்கம்

தொண்டை வலி

உடலில் தடிப்புகள்

வயிற்று உபாதைகள்

Tags :
Advertisement