For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே இது தெரியுமா..? ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க..!!

The amount of water coming out of the AC is also likely to be high. Do you know that we can use such water in many ways..?
02:21 PM Aug 20, 2024 IST | Chella
மக்களே இது தெரியுமா    ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க
Advertisement

இன்றைய காலகட்டத்தில் ஏசி, அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. வெயில் காலங்களில் மக்களுக்கு ஏசி அதிக பயனுள்ளதாக இருக்கிறது. மாத தவணைகளிலும் பலர் ஏசி வாங்கி பயன்படுத்துகின்றனர். அத்தகைய ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை நாம் பார்த்திருப்போம். மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதன் காரணமாக, ஏசி அதிக தண்ணீரை உறிஞ்சுகிறது. இதன் காரணமாக ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய தண்ணீரை பல வகைகளில் நம்மால் பயன்படுத்த முடியும் என்பது தெரியுமா..?

Advertisement

அவ்வாறு ஏசியில் இருந்து வரும் தண்ணீரை வீட்டில் உள்ள செடிகளுக்கு கூட நாம் ஊற்றலாம். ஏனென்றால், ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அசுத்தமற்ற தூய்மையான தண்ணீராகும். தண்ணீர் அசுத்தமற்றவை எனில் நாம் அதனை சூடுபடுத்தி குடிக்கலாமா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். ஆனால், நாம் அந்த தண்ணீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்தக் கூடாது.

அதாவது, ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து சமையல் அறையில் பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவ பயன்படுத்தலாம். அதேபோல், இந்த தண்ணீரை நாம் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். தண்ணீரை வாளியில் சேகரித்த பின்னர் அதை நாம் கழிவறையில் பயன்படுத்தலாம்.

Read More : வீட்டிலிருந்து மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement