”மக்களே இனி இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க”..!! பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு தடை..!!
இந்தியாவில் காய்ச்சல், சளி மற்றும் வலி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிரபலமான மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றான 'Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது. இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை பொதுமக்களின் நலன் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகள்...s
* மெஃபெனாமிக் அமிலம் + பாராசிட்டமால் ஊசி
* செடிரிசின் எச்.சி.எல் + பாராசிட்டமால் + ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல்
* கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால்
* லெவோசெடிரைசின் + ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் + பாராசிட்டமால்
* டிராமடோல் என்னும் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி
* பாராசிட்டமால் + குளோர்பெனிரமைன் + மாலேட் + ஃபீனைல் ப்ரோபனோலமைன்
மேலும் டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. இப்படி நிலையான டோஸ் காம்பினேஷன் மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பற்றதாகவும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Read More : ’இந்த பொண்ணோட ரேட் எவ்வளவு’..? ஜோராக நடக்கும் பாலியல் தொழில்..!! வலையில் சிக்கும் சிறுமிகள்..!!