மக்களே டைம் இல்ல..!! உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!! இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா..?
உங்கள் ஆதார் கார்டு பழையது என்றால், அதாவது கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் அதற்கான கடைசி வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதற்கு முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தற்போது செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் புதிய கார்டை அப்டேட் செய்த பின் உங்களுக்கு புதிய கார்டு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதை நீங்கள் பிரிண்ட் எடுக்கலாம். இல்லையென்றால், பிவிசி கார்டு போன்ற கார்டுகளை ஆர்டர் செய்யலாம். சில நாட்களில் அது உங்கள் ஆதார் விலாசத்திற்கு வந்து விடும். ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தியுள்ளது.
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை. மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும். இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை உள்ளது.
Read More : ரூ.10 நாணயம் செல்லாதா..? ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மறந்துறாதீங்க..!!