முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கேரளாவில் தாமரை மலரனும்னு தான் ஆசை" -நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் விருப்பம்...!

06:55 AM Apr 27, 2024 IST | Baskar
Advertisement

கேரளாவில் மாற்றம் வேண்டும். தாமரை மலர்ந்தால் நல்லா இருக்கும் என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார். நேற்று வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.

Advertisement

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. கேரளாவை பொறுத்தவரை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே போட்டி உள்ளது. இந்நிலையில் தான் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து மேனகா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "தேர்தலில் மாற்றம் நடந்தால் நன்றாக இருக்கும். ஒரே மாதிரியான முடிவுகள் வந்தால் நன்றாக இருக்காது. கடந்த 15 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான நிர்வாகம் நடந்து வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் புதியவர் வந்தால் தான் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை மனதில் உள்ளது. எனக்கு தாமரை மலரணும் என்று தான் ஆசை'' என்று தெரிவித்துள்ளார்.

தென்இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கூட கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 எம்எல்ஏ சீட்டுகளை வென்றது, ஆனால், மக்களவைத் தேர்தலில் 0 வாங்கியது. ஆனால், கேரளாவில் மட்டும்தான் பாஜக சட்டமன்ற தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி தொகுதிகளைகூட வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: “ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகமா?” ; மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை!

Advertisement
Next Article