PMAY திட்டத்தின் கீழ் உங்களுக்கும் வீடு வேண்டுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!
நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ஆம் ஆண்டு மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டிற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சொந்த வீடு கட்ட ஆண்டுக்கு 6.50% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம், நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை செய்வோர், 25 வயதிற்கு மேற்பட்ட கல்வி அறிவற்ற குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3-6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு pmaymis.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read More : மக்களே..!! இந்த மெசேஜ் வந்தால் உஷாரா இருங்க..!! தெரியாமல் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!!