மக்களே உடனே இதை பண்ணுங்க..!! இல்லையென்றால் இந்த ஆவணங்கள் இனி வேலை செய்யாது..!! கூடுதல் அவகாசமும் கிடையாது..!!
ரேஷன், ஆதார், பான் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வெளியிட்டு உள்ள தேதிகளை இங்கே பார்க்கலாம்.
15 வயது நிரம்பியவரா நீங்கள் ? பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று விட்டீர்களா கடைசி வாய்ப்பு. குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000ஆம் ஆண்டு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இது போன்ற அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளர் அறிவித்துள்ளார். விரைவில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்திருக்கிறதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன.
ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல், சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்ய முடிகின்றன. அதை மாற்ற சாமத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, விரைவில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். பல தனியார் நிறுவங்களிடம் இருந்து பான் விண்ணப்பிக்கும் அனுமதியை பறிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். ஆதார் போலவே, இனி பான் அட்டைகளையும் முறையாக விண்ணப்பிக்க சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் இதற்கான இறுதி டெட் லைன் நிறைவு பெறுகிறது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்தாண்டு ஜூன் 14 வரை விவரங்களைத் திருத்தலாம். ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்தியுள்ளது.
Read More : இட்லி, தோசை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா..? விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!