For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ADHAAR: 'ஆதார் இல்லாமலும் வாக்களிக்கலாம்' - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.!

06:00 AM Feb 29, 2024 IST | Mohisha
adhaar   ஆதார் இல்லாமலும் வாக்களிக்கலாம்    தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Advertisement

ADHAAR: ஆதார் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மேற்கு பங்காள மாநிலத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆதார் எண்கள் முடக்கப்பட்டாலும் வாக்களிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் "ஆதார் எண்கள் முடக்கப்பட்டது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆதார் எண்கள் முடக்கப்பட்டாலும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

English Summary: Chief Election Commissioner Rajiv Kumar said people can vote without Adhaar card.

Read More: PM MODI: பீகார் இமாச்சலப் பிரதேசத்தில் மோடி அலை… அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி.! வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!

Tags :
Advertisement