மக்களே உஷார்..!! டெங்கு காய்ச்சலால் குழந்தை உள்பட இருவர் பலி..!! மதுரையில் அதிர்ச்சி..!!
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து மதுரை மாநகரம் முழுவதும் தொற்று நோய், வைரஸ் காய்ச்சல் என பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, மதுரையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலின் காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார். இவர் வெளிநாட்டில் கப்பல் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்திய பிரியாவுக்கு கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பின்னர், சத்திய பிரியா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதுபோல் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவர் ஓட்டுனராக பணியாற்றுகிறார். இவருக்கு அனன்யா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது.
இந்த குழந்தைக்கு கலந்து சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்துகள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சு திணறால் ஏற்பட்டதால் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.