மக்களே உஷார்… நீங்க வாங்கும் இந்த 64 மருந்துகள் தரமற்றவை!… மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!
மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சந்தையில் உள்ள, 64 மருந்துகள், தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள், மாதந்தோறும் ஆய்வு செய்து வருகின்றன. அப்போது, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மாதத்தில், 1,197 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வலி நிவாரணம், சளி பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும், 64 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றில் பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதையடுத்து, அதன் விபரங்களை, https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. தரமற்றவையாக கண்டறியப்பட்ட மருந்து, மாத்திரைகளை சந்தையில் இருந்து திரும்ப பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.