மக்களே உஷார்..!! மின்சாரம் தாக்கி திடீரென பற்றி எரிந்த உடல்..!! பதைபதைக்கும் வீடியோ..!!
மொட்டை மாடியில் அலுமினிய ஏணியோடு நின்றிருந்த இளைஞர், மின்சாரம் தாக்கி உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எங்கே? எப்போது எடுக்கப்பட்டது? என்ற விவரம் வெளியாகாத நிலையில், மின்சார வயருக்கு அருகே இருக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
மின்சாரத்தை கவனமின்றி கையாண்டால் அதன் விளைவுகள் மிக பயங்கரமானதாக இருக்கும். குறிப்பாக மழைக் காலங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். மின்சாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் இல்லாததே இதற்கு காரணம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட லேப்டாப் சார்ஜ் போடும்போதும், செல்போன் சார்ஜ் போடும்போதும் இளம்பெண்கள் பலியாகினர். ஒரு துளி வியர்வை இருந்தால் கூட அது மின்சாரத்தை பெரிய அளவில் ஈர்க்கும் என்கின்றனர் மின்சாரத்துறை நிபுணர்கள்.
இந்நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என்ற விவரங்கள் இல்லை என்றாலும், விழிப்புணர்வுக்காக அந்த வீடியோவை அதிக அளவில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். மொட்டை மாடியில் நிற்கும் இளைஞர் ஒருவர் கீழிருந்து அலுமினிய ஏணி ஒன்றை எடுக்க, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக தூக்கிய போது, அருகே சென்ற மின்சார வயரில் பட்டு மின்சாரம் பாய்ந்தது.
ஒரே நொடியில் அந்த இளைஞரின் உடல் வெடித்து சிதறியதோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை பணியாளர்கள் கூறுகையில், ”பொதுவாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல அலுமினிய வயர்களையே பயன்படுத்துகின்றனர். காரணம் அலுமினியம் மின்சாரத்தை மிக எளிதில் கடத்தக்கூடியது. மேலும், மின் சேதாரத்தையும் மின் இழப்பையும் அது கட்டுப்படுத்துகிறது.
தற்போது அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் அலுமினிய ஏணியைத் தான் தூக்கி இருக்கிறார். எனவே, மின்சாரம் வயரில் பட்ட போது உடனடியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்திருக்கிறார். பொதுவாக மொட்டை மாடிகளில் துணி காய போடுவது, பந்தல் போடுவது உள்ளிட்ட சில வேலைகளை மக்கள் செய்வார்கள். மிக அருகில் மின்சாரம் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மூங்கில் குச்சி கூட மின்சாரத்தை கடத்தும். எனவே, மின் வயர் செல்லும் இடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் மொட்டை மாடிகளில் வசிப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை மின்சார வயர்களில் பிளாஸ்டிக் பை போன்றவற்றை சொருகி மின் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஈரமாக இருக்கும் துணிகளை காற்றில் வீசும் போது கூட மின்சார தாக்கி உயிர் சேர்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரிக்கின்றனர்.