முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே உஷார்!… கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

06:28 AM Mar 19, 2024 IST | 1newsnationuser3
Advertisement

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டிலில் (Packaged Water) கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடைகளில் மினரல் வாட்டர் (Mineral Water), பேக்கேஜ்டு வாட்டர் (Packaged drinking water) என இரண்டு வகையான குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும்.

Advertisement

மினரல் வாட்டர் என்பது சாதாரண வடிகட்டுதல் முறையில் சுத்தகரிக்கப்பட்ட நீரில் தாதுக்கள், சல்பர் கலவைகள் உள்ளிட்ட கரைந்த தாது உப்புகள் (dissloved salts) சேர்க்கப்பட்டிருக்கும். பேஜ்கேஜ்டு வாட்டர் என்பது வடிகட்டுதல், புற ஊதா அல்லது ஓஸோன் சிகிச்சை, பலமுறை வடிகட்டுதல் (Multiple filtration), ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (Reverse osmosis - RO) உள்ளிட்டபல்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகு பிளாஸ்டிக் (PET), கண்ணாடி பாட்டில்கள் அல்லது பைகளில் நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த ஆய்வுக்காக பிரபலமான 30 பேக்கேஜ்டு வாட்டர் நிறுவனங்களின் நீர் பயன்படுத்தப்பட்டது.

இந்திய தரநிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards - BIS) குடிநீரில் தாது உப்புகள் மற்றும் கனிமங்கள் குடிநீரில் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று ஒரு தரநிலையை நிர்ணயித்துள்ளது. ஆனால், குடிநீர் சுத்திகரிக்கப்படுவதனால் BIS-ன் தரநிலைக்கும் குறைவாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின்படி, பேக்கேஜ்டு வாட்டரில் மொத்த கரைந்த உப்புகளின் (Total dissolved Salts) அளவு ஒரு லிட்டர் நீருக்கு 2,000 மில்லிகிராம் இருக்க வேண்டும். ஆனால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நீரில் சுமார் 56 மில்லிகிராம் மட்டுமே இருந்தது.

அதே போல 188 மில்லிகிராம் இருக்க வேண்டிய கால்சியம் அளவு 3.5 மில்லிகிராம் மட்டுமே இருந்தது. அதே போல ஃபுளோரைடு என்ற தாதுஉப்பு ஒரு லிட்டருக்கு 1.5 மில்லிகிராம் இருக்க வேண்டும். ஆனால், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட குடிநீரில் 0.08 மில்லிகிராம் மட்டுமே இருந்தது. "தரத்தை ஒப்பிடும்போது ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் பேக்கேஜ்டு குடிநீரைவிட (Packaged Water) மேலாக இருந்தது" என்று ஆராய்ச்சியாளரும், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான மனோஜ் கூறினார்.

Tags :
Packaged Waterஆய்வில் அதிர்ச்சி தகவல்ஐஐடி மெட்ராஸ்கடைகளில் விற்கப்படும்
Advertisement
Next Article