For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே உஷார்..!! பிச்சு உதறப்போகும் கனமழை..!! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

The Meteorological Department has said that very heavy rain is likely in Kerala till the 25th.
04:18 PM Jun 21, 2024 IST | Chella
மக்களே உஷார்     பிச்சு உதறப்போகும் கனமழை     ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
Advertisement

கேரளாவில் வரும் 25ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துளளது. அதன்படி, வரும் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் வரும் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாளை (ஜூன் 22) கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிகோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் (ஜூன் 23) கோழிகோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வரும் ஜூன் 25ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் இந்த நாட்களில் கேரள கடல் பகுதியில் அலை ஆக்ரோஷமாக எழும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : வட்டியை கொட்டிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! மாத வருமானம் இவ்வளவு கிடைக்குமா..?

Tags :
Advertisement