For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே..!! வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..!! வானிலை ஆய்வு மையம் திடீர் Warning..!!

10:42 AM Feb 29, 2024 IST | 1newsnationuser6
மக்களே     வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்     வானிலை ஆய்வு மையம் திடீர் warning
Advertisement

தமிழ்நாட்டில் இன்று முதல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்று முதல் மேலும் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English Summary : The maximum temperature is likely to rise up to 5 degrees above normal at a couple of places from today.

Read More : PM Modi | ’சொன்னதை செய்யாத அண்ணாமலை’..!! ’கடும் அப்செட்டில் பிரதமர் மோடி’..!!

Advertisement