மக்களே தப்பு பண்ணிட்டீங்க..!! பருவம் தவறிய மழைக்கு இதுதான் காரணமாம்..!! பரபரப்பை கிளப்பிய மதுரை ஆதீனம்..!!
தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவம் தவறிய மழைக்கு மக்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இன்றைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரிக்கட்ட மறுத்த வீரன். தொடர்ந்து, அரசு இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பருவம் தவறிய மழை பொழிய காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு காரணம் மக்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான். கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை முறையாக செலுத்துவதில்லை. அதனை சரிவர செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Read More : சுபாஷே..!! பைக்கில் சென்றவர் மீது காரை விட்டு ஏற்றிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!! டிரைவிங் லைசன்ஸ் ரத்து..!!