BREAKING: திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்- பிரதமர் மோடி..!
திமுகவிற்கு எதிராக மக்கள் திரண்டிருப்பது பாஜகவிற்கு சாதகம் என பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.
ANI செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் சின்ன பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் சனாதன தர்ம விவகாரத்தில் பொதுமக்கள் திமுகவிற்கு எதிராக கோபத்தில் உள்ளார்கள். திமுக மீது உள்ள மக்களின் கோபம், பாஜகவிற்கு சாதகமாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இதை கேள்வி கேட்க வேண்டும். திமுக எப்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம், காங்கிரஸ் எப்படி இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது, கேள்வி கேட்டிருக்க வேண்டும் எனவும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் ராமர் கோவில் விவகாரம் குறித்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளுக்கு அது ஒரு அரசியல் ஆயுதம். இப்போது அது கட்டப்பட்டுள்ளது, அதனால் பிரச்சினை அவர்களின் கையை விட்டுப் போய்விட்டது" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு பகுதி இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும்.
சில மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும். டெங்கு, மலேரியா போல அதுவும் ஓழ்க்க படவேண்டிய ஒன்று என பேசியிருந்தது, நாடு முழுவது அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சனாதன தர்மம் குறித்து திமுகவின் கருத்துகள், ஆகியவை குறித்து பிரதமர் மோடி தற்போது பேசியுள்ளார்.